Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

சூட்கேஸை திருமணம் செய்து கொண்ட வினோத யுவதி!

23 December, 2020, Wed 9:44   |  views: 1799

ரெயின் கோர்டன் (Rain Gordon) என்று அறியப்படும் மொஸ்கோவை சேர்ந்த யுவதியே இவ்வாறு விநோத திருமணத்தை செய்து சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறார்.

 
தனது சிறிய பெட்டியை தனது கணவர் என்று கூறிக் கொள்கிறார் ரெயின் கோர்டன்.
 
அந்நாட்டு ஊடகங்களில் வெளியான தகவலின் படி, ரெயின் கோர்டன் அந்த சிறிய பெட்டியுடன் திருமணம் செய்து கொண்டார் என்றும். அந்த திருமண விழாவில் ரெயினின் ஒரு நண்பரும் பங்கெடுத்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.
 
மேற்படி 24 வயதான ரெயின் கோர்டன், மனிதர்களை காட்டிலும் தனக்கு பொருட்கள் மீது அதிக அன்பு செலுத்த தோன்றுகிறது. மேலும், இவ்வுலகிலுள்ள அனைத்திலும் உயிர் மற்றும் வாழ்க்கை இருக்கிறது என்று தான் நம்புவதாக கூறியிருக்கிறார்.
 
அத்துடன், ரெய்ன் தனது கணவரான (சிறிய பெட்டி) ஜிடியானை ஆகஸ்ட் 2015ஆம் ஆண்டு ஒரு கடையில் சந்தித்ததாகவும், அப்போதிருந்தே தனக்கு அதன் மீது பேரார்வம் உண்டானது என்றும் கூறியிருக்கிறார்.
 
தொடர்ந்து அவர் கூறியதாவது, தனது குழந்தை மற்றும் பருவ வயதினிலே, இடங்கள், பொருட்கள், நகரங்கள், கட்டிடங்கள் மீது அதிக காதல் கொண்டேன். இது தவறு என்றும் சமூக வாழ்வியலுக்கு எதிரானது எனவும் நான் அறிந்திருந்தேன். ஆகையால், அச்சமயம் எனது இத்தகைய விருப்பங்கள் குறித்து வெளியே யாரிடமும் கூறவில்லை.
 
2017ஆம் ஆண்டு நானொரு ஆணுடன் உறவில் இருந்தேன். ஆனால், அந்த உறவில் பெரிதாக நெருக்கம் உருவாகவில்லை. ஒரு கட்டத்தில் தனது காதலரா அல்லது ஜிடியானா (சூட்கேஸ்) என்ற நிலை உண்டான போது, எந்தவொரு தயக்கமும் இன்றி, ஜிடியானை தெரிவு செய்ததாக ரெயின் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த வருடம் 30 வயதுமிக்க மிச்செல் கெப்கே என்ற பெண்னொருவர், போயிங் 737-800 சாட்ஸ் எனும்  விமானத்தின் மீது காதல் கொண்டுள்ளதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS