Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மின்னல் தாக்கம் குறித்து வௌியான எச்சரிக்கை

இலங்கையில் மின்னல் தாக்கம் குறித்து வௌியான எச்சரிக்கை

15 வைகாசி 2025 வியாழன் 11:00 | பார்வைகள் : 889


இலங்கையின் மேல், மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த எச்சரிக்கை இன்று (15) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்