Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - 20 பேர் பலி

இந்தோனேசியாவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - 20 பேர் பலி

17 வைகாசி 2025 சனி 12:42 | பார்வைகள் : 2022


இந்தோனேசியாவின் பதற்றமான பப்புவா பகுதியில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

20-க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் வில் அம்புகளுடன், இன்டான் ஜயாவில் உள்ள கிராமங்களில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவை வழங்க தயாராக இருந்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ஆயுதம் ஏந்திய குழுக்கள் அரசு வீரர்களை தாக்கும்போது சூழ்நிலை மோசமானது.

இதனால் பொலிஸாரும் எதிர் தாக்குதல் நடத்தவேண்டிய சூழநிலை ஏற்ப்பட்டதாக இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிகள், அம்புகள், வெடிப்பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றினர் எனவும் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்