Paristamil Navigation Paristamil advert login

மக்ரோன்-செலன்ஸ்கி : 'நடைமுறைக்கு சாத்தியமானவை' தொடர்பில் கலந்துரையாடல்!!

மக்ரோன்-செலன்ஸ்கி : 'நடைமுறைக்கு சாத்தியமானவை' தொடர்பில் கலந்துரையாடல்!!

21 வைகாசி 2025 புதன் 13:53 | பார்வைகள் : 1640


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் யுக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கியும் மிக ஆழமான உரையாடல் ஒன்றை தொலைபேசி வழியாக மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மே 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை இந்த உரையாடல் இடம்பெற்றது. "நான் இம்மானுவல் மக்ரோனுடன் உரையாடினேன். அது மிகவும் ஆழமான உரையாடலாக அமைந்திருந்தது. நடைமுறைக்கு சாத்தியமானவற்றை கலந்துரையாடினோம்!" என செலன்ஸ்கி தெரிவித்தார்.

மேலும், "எங்களுடன் இணையும் கூட்டணிகள் குறித்து உரையாடினோம்.  கூட்டணிகளுடன் இணைந்து நாம் திட்டங்களை தயாரிக்கிறோம்.  எங்கள் கூட்டணி மேலும் மேலும் உறுதியாகி வருகிறது' எனவும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்