Paristamil Navigation Paristamil advert login

போரில் இணைகிறதா பிரான்ஸ்? - பிரான்சை மிரட்டும் ஈரான்!!

போரில் இணைகிறதா பிரான்ஸ்? - பிரான்சை மிரட்டும் ஈரான்!!

14 ஆனி 2025 சனி 11:54 | பார்வைகள் : 2882


 

இஸ்ரேல் - ஈரான் யுத்தம் வலுத்துள்ள நிலையில், ஈரான் பிரான்சுககும், பிரித்தானியாவுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அதை அடுத்து, யுத்தகளத்தில் பிரான்ஸ் நேரடியாக களமிறங்கும் கட்டாயம் எழும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

"பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய கப்பல்களை அடித்து நொருக்குவோம். இரு நாடுகளும் இஸ்ரேலுக்கு உதவுவதை நிறுத்த வேண்டும்!" என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரானை தாக்குவதை உடனடியாக இஸ்ரேல் நிறுத்த வேண்டும் எனவும், பிரான்ஸ், பிரித்தானியா இஸ்ரேலுக்கு உதவுவதை நிறுத்தவேண்டும். இல்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என  ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்த மிரட்டலுக்கு பதில் சொல்லுமா பிரான்ஸ்..?!

வர்த்தக‌ விளம்பரங்கள்