Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் ஈரான் மோதல்களின் பின்னர் ஈரானில் சீற்றம் கவலை

இஸ்ரேல் ஈரான் மோதல்களின் பின்னர் ஈரானில் சீற்றம் கவலை

16 ஆனி 2025 திங்கள் 17:51 | பார்வைகள் : 1349


இஸ்ரேல் மீதான ஈரானின் பதிலடி தாக்குதல் குறித்த படங்களுடன் தலைநகர் தெஹ்ரானில் சனிக்கிழமை காலை கண்விழித்த ஈரானியர்கள் மத்தியில் கவலையும் சீற்றமும் காணப்பட்டது.

ஈரானின் இறையாட்சியின் தீவிர ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் நீண்டகாலமாக காணப்படும் அரச தொலைக்காட்சி அன்று காலை முழுவதும் டெல்அவி மீதான ஏவுகணை தாக்குதல்களின் காட்சிகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது.

தெஹ்ரானின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரையின் முன்னால் பெருமளவு ஈரானியர்கள் கால்பந்தாட்ட போட்டியை பார்ப்பது போன்று இஸ்ரேல் மீதான தாக்குதல்களை பார்ப்பதையும் ஆரவாரம் செய்வதையும் ஈரான் தொலைக்காட்சி காண்பித்தது.

ஈரானிய வீதிகளில் வழமையை விட வெளிச்சம் குறைவாக காணப்பட்டது,மதவிடுமுறையும் இதற்கு காரணம்,இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பமாவதற்கு முன்னரே பல ஈரானியர்கள் கஸ்பியன் கடல் அமைந்துள்ள பகுதிக்கு விடுமுறைக்காக சென்றுவிட்டனர்.

விடுமுறை மனோநிலையில் மக்கள் காணப்பட்டதால் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகளவு அதிர்ச்சியை ஏற்படுத்தின,குறிப்பாக இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1980 ஈரான் ஈராக் யுத்தத்தின் பின்னர் இவ்வாறான உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை.

இஸ்ரேல் எங்கள் தளபதிகளை கொலை செய்தது பதிலுக்கு அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள்? முத்தத்தையா  என 29 வயது டாக்சி சாரதியான மஹ்மூத் டொரி கேள்வி எழுப்பினார்.நாங்கள் அவர்களை தேடிச்சென்று பமிவாங்குவோம் கண்ணிற்கு கண்ணிற்கு என அவர் தெரிவித்தார்.

தெஹ்ரானின் புறநகர் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயான பரி பௌர்காசி இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.இந்த சம்பவங்களை காசா பள்ளத்தாக்கில் ஹமாசிற்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுத்துள்ள பாரிய தாக்குதலுடன் அவர் தொடர்புபடுத்தினார்.

'யாராவது இஸ்ரேலை தடுத்து நிறுத்தவேண்டும்,அவர்கள் தாங்கள் எந்தவேளையிலும் தாங்கள் நினைத்ததை செய்யலாம் என நினைக்கின்றனர்," என தெரிவித்த அவர் இஸ்ரேலியர்களினால் காசாவிலும் லெபானிலும் பொதுமக்களை குண்டுவீச்சின் மூலம் ஒடுக்க முடிந்த போதிலும் தாங்கள் நினைத்ததை செய்யலாம்  என்ற இஸ்ரேலியர்களின் நினைப்பு பிழையானது என்பதை ஈரான் அவர்களிற்கு காண்பித்துள்ளது என அவர் தெரிவித்தார்.

வாகன திருத்துனரான ஹவுஷாங் எபாடி ஈரானின் தாக்குதலிற்கு ஆதரவை வெளியிட்டார்,ஆனால் ஈரானிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான முழுமையான போரை எதிர்ப்பதாக தெரிவித்தார்.
'நான் எனது நாட்டை ஆதரிக்கின்றேன் இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டதன் மூலம் தவறிழைத்துள்ளது ஆனால் இது முடிவிற்கு வரும் என எதிர்பார்க்கின்றேன்,யுத்தம் இரு தரப்பிற்கும் எந்த பலனையும் தரப்போவதில்லை " என அவர் குறிப்பிட்டார்.

ஏனையவர்கள் வாய்மொழி மூலமாக அல்லது தங்கள் செய்கைகள் மூலமாக கரிசனைகளை வெளியிட்டனர். தெஹ்ரானின் ஒரு  எரிபொருள் நிலையத்தில் 300 வாகனங்கள் வரிசையில் காணப்பட்டன, வாகனச்சாரதிகள் பொறுமையிழந்தவர்களாக காணப்பட்டனர்.

எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்படலாம் என மக்கள் அஞ்சுவதால் சில நேரங்களில் நீண்டவரிசைகள் காணப்படுகின்றன, மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவும் மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர்,என தெரிவித்த 43 வயது நஹீத் ரோஸ்டாமி இந்த அவசரகால நிலை எப்போது முடிவிற்கு வரப்போகின்றது என கேள்வி எழுப்பினார்.

பழ விற்பனையாளர் ஹமீத் ஹசன்லு 41 தனது இரட்டைக் குழந்தைகளால் வெள்ளிக்கிழமை இரவு வெடிப்புச் சத்தங்களாலும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் வெடிப்பதாலும்  வெடிப்பதாலும் தூங்க முடியவில்லை என்றார்.

மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை இரு நாடுகளின் தலைவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்இ ”என்று அவர் கூறினார்.

மக்கள் பிரதான உணவான பாரம்பரிய ஈரானிய ரொட்டி உள்ளிட்ட பொருட்களை வாங்க முயன்றதால் பேக்கரி கடைகளும் கூட்டத்தை ஈர்த்தன.

போர் காரணமாக மா அல்லது மின்சாரம் இல்லாமல் இருக்கலாம் என்று நான் நினைப்பதால் நான் அதிக ரொட்டி வாங்குகிறேன்" என்று 56 வயதான இல்லத்தரசி மொலூக் அஸ்காரி கூறினார்.

"எனக்கு குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். உணவு தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் கடினமான சூழ்நிலையில் அவர்களை என்னால் பார்க்க முடியாது.

“இன்றிரவு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?” என்று ரோஸ்டாமி கூறினார்.

நன்றி virakesari
 

வர்த்தக‌ விளம்பரங்கள்