Paristamil Navigation Paristamil advert login

போர்க்களங்களில் தீர்வு கிடைக்காது; குரோஷியாவில் மோடி பேச்சு!

போர்க்களங்களில் தீர்வு கிடைக்காது; குரோஷியாவில் மோடி பேச்சு!

19 ஆனி 2025 வியாழன் 13:58 | பார்வைகள் : 1401


ஜனநாயகத்தில் பயங்கரவாதம் விரோதமானது. தீர்வு காண பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மட்டும் ஒரே வழி'' என குரோஷியாவில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.

மூன்று நாள் அரசு முறை பயணத்தின் இறுதி கட்டமாக, ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றடைந்தார். விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்புக்கு, பிரதமர் மோடி சமூக வலைதள பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.

ஜாக்ரெபில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற மோடிக்கு, அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். குரோஷியா பிரதமர் ப்ளென்கோவிக்யை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். குரோஷியா அதிபர் ஜோரன் மிலன்நோவிக்கை மோடி சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதாவது: ஜனநாயகத்தில் பயங்கரவாதம் விரோதமானது. ஐரோப்பாவிலோ அல்லது ஆசியாவிலோ போர்க்களங்களில் இருந்து தீர்வுகளை காண முடியாது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மட்டுமே ஒரே வழி என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்தியாவும், குரோஷியாவும் நல்ல உறவுகளை கொண்டுள்ளது. இந்திய பிரதமர் குரோஷியாவிற்கு வருவது இதுவே முதல் முறை.

இந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் பெருமைப்படுகிறேன். ஜாக்ரெப்பில் எனக்கு இவ்வளவு அன்பான வரவேற்பு அளித்ததற்காக பிரதமருக்கும், குரோஷியா அரசாங்கத்திற்கும் நன்றி. மருந்து, விவசாயம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்