Paristamil Navigation Paristamil advert login

Seine-Saint-Denis : RER நிலையம் அருகே இரு பெண்கள் மீது கோடாரி தாக்குதல்!

Seine-Saint-Denis : RER நிலையம் அருகே இரு பெண்கள் மீது கோடாரி தாக்குதல்!

20 ஆனி 2025 வெள்ளி 13:25 | பார்வைகள் : 2662


Seine-Saint-Denis நகரில் உள்ள Gagny RER  தொடருந்து நிலையத்தின் அருகே வைத்து இரு பெண்கள் கோடரியால் தாக்கப்பட்டுள்ளனர்.

உயிருக்கு போராடும் நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 20, இன்று வெள்ளிக்கிழமை காஅலை 7 மணி அளவில் தொடருந்து நிலையம் நோக்கி நடந்து சென்ற இரு பெண்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.காயமடைந்த பெண்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் 55 வயதுடையவர் எனவும், மற்றையவர் 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

தாக்குதல் மேற்கொண்டவர், குறித்த 55 வயதுடைய பெண்ணின் முன்னாள் காதலன் என தெரிவிக்கப்படுகிறது. 

விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்