Paristamil Navigation Paristamil advert login

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் படம் தாமதம் ஆவதற்கான காரணம் என்ன >

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் படம் தாமதம் ஆவதற்கான காரணம் என்ன >

10 ஐப்பசி 2025 வெள்ளி 16:13 | பார்வைகள் : 539


அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் நிலவுகிறது. பட தயாரிப்பு குறித்து பலவிதமான முரண்பட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

அஜித் தனது சம்பள விஷயத்தில் பிடிவாதமாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனால் தயாரிப்பாளர் ராகுல் தரப்பு, சம்பளத்தில் குறைக்க கோரியபோது, அஜித் ஒரு சலுகை அளித்துள்ளார்: அதாவது, படம் முடிந்து, வியாபாரம் ஆன பிறகு லாபத்திலிருந்து தனது சம்பளத்தின் ஒரு பகுதியைத் தருவதாக ஒப்புக் கொண்டாராம். இருப்பினும், சம்பளத்தில் எந்த குறைப்பும் கிடையாது என்று கறாராக சொல்லிவிட்டதாக தெரிகிறது.

ஆனால் அஜித் படத்திற்கு ஃபைனான்ஸ் கொடுக்கக்கூட யாரும் முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம், அஜித்தின் முந்தைய படங்களான 'குட் பேட் அக்லி', 'விடா முயற்சி' ஆகியவற்றால் ஏற்பட்ட நஷ்டங்கள் என்றும், தொடர்ச்சியாக நஷ்டப்படங்களை அளித்தவர்களுக்கு நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தாமதமாகிறது என்றாலும் நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வர்த்தக‌ விளம்பரங்கள்