அவதானம்: மீளப்பெறப்படும் சிக்கன் பிலே!!
18 ஐப்பசி 2025 சனி 14:03 | பார்வைகள் : 2354
Le Gaulois என்ற பிராண்டின் 720 கிராம் சிக்கன் பிலே (Filet de poulet jaune), Leclerc மற்றும் Auchan கடைகளில் விற்கப்பட்டுள்ளன, தற்போது இரசாயன மாசுபாடு இருப்பதற்கான சந்தேகத்தால் மீளப்பெறப்பட்டுள்ளன.
இந்த தயாரிப்பின் தொகுதி எண் 2015492681, GTIN குறியீடு 3266980123987, மற்றும் கடைசி பயன்பாட்டு தேதி 30 அக்டோபர் 2025 ஆகும். இது 15 அக்டோபர் முதல் விற்பனையில் இருந்ததால், இன்னும் சில கடைகளில் இருக்கக்கூடும்.
Rappel Conso தளத்தின் தகவலின்படி, இந்த சிக்கனில் விஷ அபாயம் உள்ளது. எனவே, இந்த தயாரிப்பை சாப்பிட வேண்டாம், அதை வாங்கியிருந்தால் கடைக்கு திருப்பிக் கொடுத்து உங்கள் பணத்தை திரும்ப பெறலாம். மேலதிக தகவலுக்கு வாடிக்கையாளர் சேவை எண்ணை (02.43.62.70.00) தொடர்பு கொள்ளலாம்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan