போலி தபால்காரர்கள் தாக்குதல்: 2 லட்சம் யூரோக்கள் பறிக்க முயன்ற கும்பல்!!
3 கார்த்திகை 2025 திங்கள் 14:47 | பார்வைகள் : 2771
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் Hauts-de-Seine மாவட்டத்தின் கொலோம்பில் (Colombes), மூன்று பேர் தபால்காரர்களாக வேடமணிந்து, முகமூடி அணிந்தும் ஆயுதங்களுடன் ஒரு குடும்ப வீட்டில் நுழைந்து 200,000 யூரோக்கள் கேட்டு தந்தையையும் மகளையும் மிரட்டியுள்ளனர். அவர்கள் தேடிய 23 வயது இளைஞன் அப்போது வெளிநாட்டில் விடுமுறையில் இருந்ததால், குற்றவாளிகள் எதையும் எடுக்காமல் ஓடிச் சென்றுள்ளனர்.
அடுத்த நாள், அந்த இளைஞனிடம் WhatsApp மூலம் மீண்டும் 80,000 யூரோ கேட்டு தொடர்பு கொண்டனர், ஆனால் குடும்பத்தினர் இந்த மிரட்டல்களின் காரணத்தை அறியவில்லை. காவல்துறையினர் விசாரணையில் WhatsApp கணக்கின் பின்னால் இருந்த நபரையும், ஒரு கூட்டாளியையும் கண்டுபிடித்தனர்.
இருவரும் காவல்துறையினரால் ஏற்கனவே அறியப்பட்டவர்கள். அவர்கள் அக்டோபர் 28 அன்று கைது செய்யப்பட்டனர். ஒருவன் எமேரைன்வில்லில் Émerainville (Seine-et-Marne), மற்றொருவன் பரிஸ் லா சாங்தே சிறையில் இருந்து எடுக்கப்பட்டான். இவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் புதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மூன்றாவது குற்றவாளி இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மேலும் இருவரும் விசாரணையில் மௌனமாக இருந்துள்ளனர். வழக்கு டிசம்பர் 17 அன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan