Paristamil Navigation Paristamil advert login

Pantin : காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினர்!!

Pantin : காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினர்!!

3 கார்த்திகை 2025 திங்கள் 19:31 | பார்வைகள் : 1739


Pantin நகரில் பணிபுரியும் இரு காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Parc de la Villette பூங்காவில் குறித்த இரு காவல்துறையினர் நேற்று நவம்பர் 2 ஆம் திகதி முற்பகல் 11.15 மணி அளவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென அவர்களை சூழ்ந்துகொண்ட எட்டுப்பேர் கொண்ட குழு ஒன்று அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பித்த இரு காவல்துறையினரும், சக காவல்துறையினரை அழைத்துள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பல்வேறு காவல்துறையினர், உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டு குறித்த எட்டு பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் இராணுவத்தினர்  என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்