Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

ஷாருக்கான் யோகிபாபுக்கு அழைப்பு விடுத்தாரா....?

ஷாருக்கான்  யோகிபாபுக்கு அழைப்பு  விடுத்தாரா....?

2 புரட்டாசி 2023 சனி 06:12| பார்வைகள் : 1133


யோகிபாபுவை சிஎஸ்கே அணியில் இணைத்துக்கொள்ள தல தோனி சம்மதம் தெரிவித்த நிலையில் தற்போது கேகேஆர் அணியில் யோகிபாபுவை இணைத்துக்கொள்ள ஷாருக்கான் சம்மதம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தோனி தயாரிப்பில் உருவான ’எல்ஜிஎம்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது ஐபிஎல் சிஎஸ்கே அணியில் யோகி பாபுவை இணைத்துக் கொள்ள சம்மதம் என்றும், ஆனால் அதே நேரத்தில் யோகிபாபு மேட்ச் விளையாடும் நேரத்தில் கால்ஷீட் சரியாக கொடுக்க வேண்டும் என்றும் பிராக்டிஸ் செய்வதற்கு வரவேண்டும் என்றும் அவருக்கு சம்மதம் என்றால் சிஎஸ்கே நிர்வாகத்திடம் பேசுவதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் பந்து பேச்சாளர்கள் ஸ்டெம்பை நோக்கி பந்து போட மாட்டார்கள் என்றும் பேட்ஸ்மேனை நோக்கி தான் பந்து போடுவார்கள் என்றும் அதை சமாளிக்கும் திறன் யோகிபாபுவுக்கு இருந்தால் தாராளமாக அவர் சிஎஸ்கே அணிக்கு வரலாம் என்றும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தோனியை அடுத்து தற்போது ஷாருக்கானும் தனது கேகேஆர் ஐபிஎல் அணிக்கு யோகிபாபுவை அழைத்துள்ளார். சமீபத்தில் ’ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது தொகுப்பாளினி பாவனா ’கடந்த மாதம் , யோகிபாபுவை சிஎஸ்கே அணியில் விளையாட தல தோனி அழைப்பு விடுத்தார், நீங்கள் அவரை உங்கள் கேகேஆர் டீமில் விளையாட அழைப்பு விடுப்பீர்களா? என்று கேட்டபோது ஷாருக்கான் தம்ஸ் அப் காட்டி சம்மதம் தெரிவித்தார். இது குறித்த புகைப்படம், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.