Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

Yvelines : பெண் காவல்துறை வீரரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஒருவர்கைது

Yvelines : பெண் காவல்துறை வீரரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஒருவர்கைது

4 புரட்டாசி 2023 திங்கள் 11:52| பார்வைகள் : 2381


 

பெண் காவல்துறைவீரர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஒருவரைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர். Chatou (Yvelines) நகரில் இச்சம்பவம்இடம்பெற்றுள்ளது. 

 

அங்கு இடம்பெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பெண் ஒருவரதுகுளிர்பானத்தில் அவர் அறியா வண்ணம், போதைப்பொருளை நபர் ஒருவர்கலந்துள்ளார். பின்னர் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி முத்தமிடமுயற்சித்துள்ளார். அதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

கடமையில் நின்ற காவல்துறை அதிகாரிகள் சிலர் இணைந்து குறித்த நபரைக்கைது செய்தனர். 

 

பாதிக்கப்பட்ட பெண், ஒரு காவல்துறை வீரர் என பின்னர் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கலந்த குளிர்பானத்தை அருந்திய பெண் காவல்துறை வீரர்உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு இரவுமுழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டது.