Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

அமீர்கான் புகைப்படத்தால் பரபரப்பு..!

அமீர்கான்  புகைப்படத்தால் பரபரப்பு..!

4 புரட்டாசி 2023 திங்கள் 14:28| பார்வைகள் : 1456


நடிகர் அமீர்கான் தமிழ் திரைப்படத்தில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், ஜாக்கி ஷெராப், சஞ்சய் தத், அனுராக் காஷ்யப் உட்பட ஒரு சிலர் தமிழ் படங்களில் நடித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது தமிழ் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நபர் அமீர்கானை சந்தித்துள்ளதால் அவர் தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் ஐஸ்வர்யா கல்பாதி அவர்கள் சமீபத்தில் நடிகர் அமீர்கானை சந்தித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். ’ஒரு மிகப்பெரிய நடிகருடன் சில நிமிடங்கள் செலவு செய்வேன் என்பதை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ மற்றும் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் ’தனி ஒருவன் 2’ ஆகிய இரண்டு படங்களை அடுத்தடுத்து தயாரிக்க உள்ளதால் இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தில் அமீர்கான் வில்லன் வேடத்தில் அல்லது முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.