Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

கலைந்த காதல்

 கலைந்த காதல்

27 ஆவணி 2023 ஞாயிறு 11:35| பார்வைகள் : 2474


அன்று
நீ நெருங்கி வர
படபடத்து
வெட்கம் அள்ளி
பூசிய இதயம்...
 
இன்று
நீ விலகிச் செல்ல
பதைபதைத்து
கண்ணீர் அள்ளி பூசுது...
 
காதல் கலைய
நோகும் மனம்
தேடும் தினம்
உன் அருகாமை...
 
உன்னால்
அநாதையான
உணர்வுகள்
கண்களில் வழிந்தோட
 
காதல் நனைந்த
பேனாவில்
சிந்தின
கவிதை துளிகள்!