Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

ஏ ஆர் ரகுமானுடன் கூட்டணி அமைக்கும் மிஷ்கின்!

ஏ ஆர் ரகுமானுடன் கூட்டணி அமைக்கும் மிஷ்கின்!

15 புரட்டாசி 2023 வெள்ளி 16:40| பார்வைகள் : 1247


பிரபல இயக்குனரான மிஷ்கின் படம் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பதிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இதற்கிடையில் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூஜா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று செய்திகள் பரவி வருகிறது. அதே சமயம் விஜய் சேதுபதியின் நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மிஸ்கின் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ ஆர் ரகுமான் முதன் முறையாக மிஷ்கின் இயக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.