Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

சல்மான் கானுக்கு ஜோடியாகும் த்ரிஷா?

சல்மான் கானுக்கு ஜோடியாகும் த்ரிஷா?

16 புரட்டாசி 2023 சனி 15:49| பார்வைகள் : 1013


நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருபவர். அதுவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு த்ரிஷாவின் மார்கெட் மீண்டும் உயர்ந்தது. தற்போது நிறைய தமிழ் பட வாய்ப்புகள் த்ரிஷாவிற்கு வருகிறது.

தமிழை தொடர்ந்து தற்போது 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹிந்தி சினிமா த்ரிஷாவை அழைக்கிறது. அதன்படி, தமிழில் பட்டியல், பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் அடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இதனை கரண் ஜோகர் தனது தர்மா புரொடக்சன்ஸ் மூலம் தயாரிக்கின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதத்தில் துவங்குகிறது. அடுத்த வருடம் (2024) கிறிஸ்துமஸ் நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா உடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது. ஏற்கனவே, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சர்வம் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.