Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

நபர் ஒருவரை கொடூரமாக தாக்கும் காவல்துறை வீரர் - இணையத்தில் பரபரப்பாக பரவும் காணொளி!!

நபர் ஒருவரை கொடூரமாக தாக்கும் காவல்துறை வீரர் - இணையத்தில் பரபரப்பாக பரவும் காணொளி!!

18 புரட்டாசி 2023 திங்கள் 19:38| பார்வைகள் : 3170


நபர் ஒருவரை காவல்துறை வீரர் ஒருவர் மோசமாக தாக்கும் காணொளி ஒன்று இணையத்தளத்தில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது. என்றபோதும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என அறிய முடிகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ள இந்த காணொளி Vitry-sur-Seine (Val-de-Marne) நகரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 20 வயதுடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளதாகவும், அதன்போதே தாக்குதல் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் புகாரளிக்கவில்லை எனவும், காவல்துறையினர் மீது விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.