Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

இலங்கையில் முட்டை ரோல்ஸ் கொள்பனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் முட்டை ரோல்ஸ் கொள்பனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

19 புரட்டாசி 2023 செவ்வாய் 04:48| பார்வைகள் : 1424


பெந்தர பிரதேசத்தில் உணவகம் ஒன்றில் சிற்றுண்டிப் பொருட்களிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட முட்டை ரோல்ஸ் ஒன்றுக்குள் பிளாஸ்டிக் அல்லது இரப்பரைப் போன்ற உருண்டை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அதனை கொள்வனவு செய்த வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்ததாக பெந்தர சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளனர்.

அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மறைப்பாட்டாளர் மற்றொரு நபருடன் பெந்தர உணவகத்திற்குச் சென்று 1230 ரூபாய்க்கு முட்டை ரோல்ஸ் உட்பட பல உணவு பொருட்கள் ஆகியவற்றை வாங்கியுள்ளார்.

முட்டை ரோல்களில் முட்டை போன்ற வெள்ளை உருண்டையை நசுக்க முடியாத வகையில் காணப்பட்டதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

அதனை தீயில் வைத்தால் பிளாஸ்டிக் போன்று எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.