Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

ஓட்ஸ் கஞ்சி

ஓட்ஸ் கஞ்சி

2 தை 2023 திங்கள் 17:00| பார்வைகள் : 8108


 டயட்டை மேற்கொள்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் நல்ல உணவு. அதிலும் ஓட்ஸை வெறும் பாலுடன் சேர்த்து கலந்து, சாப்பிடுவதை விட, அதில் சிறிது பழங்களையும் சேர்த்து, காலையில் அலுவலகத்திற்கு செல்லும் முன் சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். 

 
அந்த வகையில் இங்கு ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் கொண்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும் கஞ்சியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, காலையில் செய்து நாளை ஆரோக்கியமாக தொடங்குங்கள்.

தேவையான பொருட்கள்: 
 
ஓட்ஸ் - 1/2 கப் 
கோதுமை ரவை - 1/4 கப் 
வெண்ணெய் - 1 டீஸ்பூன் 
பால் - 1 1/2 கப் 
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன் 
ஆப்பிள் - 1 கப் (நறுக்கியது) 
வாழைப்பழம் - 1 கப் (நறுக்கியது)
சர்க்கரை - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
 
செய்முறை: 
 
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், ஓட்ஸ் சேர்த்து 3-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வறுக்க வேண்டும். 
 
பின்னர் கோதுமை ரவையை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வறுக்க வேண்டும். பின்பு அதில் பால் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும். 
 
விசிலானது போனதும், மூடியைத் திறந்து அதில் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிவிட வேண்டும். இறுதியில் அதனை ஒரு பௌலில் போட்டு, நறுக்கிய ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சூப்பரான ஓட்ஸ் கஞ்சி ரெடி!!!
 
 

எழுத்துரு விளம்பரங்கள்