Paristamil Navigation Paristamil user login Paristamil advert login
 தனது வீட்டை விற்று ஐரோப்பாவை சுற்றிப்பார்க்கும் தம்பதி! 

 தனது வீட்டை விற்று ஐரோப்பாவை சுற்றிப்பார்க்கும் தம்பதி! 

 தனது வீட்டை விற்று ஐரோப்பாவை சுற்றிப்பார்க்கும் தம்பதி! 

18 புரட்டாசி 2023 திங்கள் 09:05| பார்வைகள் : 762


பிரித்தானியா நாட்டை சேர்ந்த தம்பதி தங்கள் பிள்ளைகளுடன் வீட்டை விற்றுவிட்டு ஐரோப்பிய நாடுகளை சுற்றி வந்துள்ளனர்.

Swindonயைச் சேர்ந்த தம்பதி கார்ல் மற்றும் ரூத் ஜாக்சன். 

இவர்கள் கொவிட் லாக்டவுன்போது வீட்டிலேயே இருந்ததால் அவதிப்பட்டுள்ளனர்.

இதனால் லாக்டவுன் முடிந்ததும் தங்கள் சுதந்திரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று சபதம் செய்தனர். 

அதற்கான நேரம் வந்ததும் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்துள்ளனர்.

பணத்திற்காக தங்கள் வீட்டை 5,35,000 பவுண்ட்களுக்கு சந்தையில் விற்றுள்ளனர்.

மேலும் அவர்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, Six-berth மோட்டார் ஹோம் வாகனம் ஒன்றை 60,000 பவுண்ட்களுக்கு வாங்கி, தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

Signage தொழில் செய்யும் கார்ல், ரூத் தம்பதி வீட்டை விற்று பயணத்தை தொடங்கியதில் எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளனர். 

அத்துடன் பள்ளியில் படித்ததை விட தங்கள் பிள்ளைகள் சாலைகளில் அதிகம் கற்றுக்கொண்டதாக நம்புகிறார்கள். 

கார்ல் குடும்பத்தினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை மொத்தம் 28 வெவ்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளது.

இந்த ஜோடி பயணத் திட்டத்தை முடிவு செய்த அதே மாதத்தில் தங்கள் வீட்டை விற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.