Paristamil Navigation Paristamil user login Paristamil advert login
 பிரித்தானியாவில் கடும் மழை!  நீரில் மூழ்கிய நகரம்...

 பிரித்தானியாவில் கடும் மழை!  நீரில் மூழ்கிய நகரம்...

 பிரித்தானியாவில் கடும் மழை!  நீரில் மூழ்கிய நகரம்...

18 புரட்டாசி 2023 திங்கள் 07:43| பார்வைகள் : 330


பிரித்தானியாவில் பயங்கர கனமழை பெற்து  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு இங்கிலாந்து மக்களுக்கு அரிதாக அம்பர் வானிலை எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டிருந்தது. 

இரண்டு வாரங்களுக்கான மழை மொத்தமாக ஒரு மணி நேரத்தில் பெய்துள்ளதாகவும் வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

டாவ்லிஷில் அமைந்துள்ள கடலோர டெவோன் நகரத்தில் வசிப்பவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஞாயிறன்று மதியத்திற்கு மேல் சுமார் 5.30 மணியளவில் அம்பர் வானிலை எச்சரிக்கை வெளியிடப்பட்டது. 

இதனிடையே எக்ஸெட்டர் விமான நிலைய டெர்மினல் வெள்ளத்தில் மூழ்கியதால் பயணிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இதனையடுத்து பல எண்ணிக்கையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 

விமான நிலைய அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், இன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து, எக்ஸெட்டர் விமான நிலைய முனையத்தை வெள்ளம் பாதித்ததால் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் சில பகுதிகளில் மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்று கிழமை மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த மஞ்சள் எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்