Paristamil Navigation Paristamil user login Paristamil advert login
அஜித் படத்தில் இணைகிறாரா மோகன்லால்?

அஜித் படத்தில் இணைகிறாரா மோகன்லால்?

அஜித் படத்தில் இணைகிறாரா மோகன்லால்?

18 புரட்டாசி 2023 திங்கள் 15:19| பார்வைகள் : 299


தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான அஜித் மற்றும் மலையாள திரை உலகின் முன்னணி நடிகரான மோகன்லால் ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று கடந்த சில மணி நேரங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்களா? அல்லது அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்தில் மோகன்லால் இணைகிறாரா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இருப்பினும் இருவரும் இணைந்து நடிப்பது குறித்த எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை என்பதால் இந்த புகைப்படம் மரியாதை நிமித்தமாக எடுக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

அஜித் ஏற்கனவே மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் மோகன்லால் உடன் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதேபோல் நடிகர் மோகன்லால் ரஜினியுடன் 'ஜெயிலர்’ கமல்ஹாசன் உடன் ’உன்னை போல் ஒருவன்’ விஜய்யுடன் ’ஜில்லா’ ஆகிய படங்களில் நடித்த நிலையில் அஜித்துடன் இணைந்து விரைவில் நடிப்பாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்