Paristamil Navigation Paristamil user login Paristamil advert login
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

19 புரட்டாசி 2023 செவ்வாய் 15:15| பார்வைகள் : 705

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று(19) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 318 ரூபா 26 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 60 சதமாக காணப்பட்டது.

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 60 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் , அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 328 ரூபா 83 சதமாக காணப்பட்டது.
 
எழுத்துரு விளம்பரங்கள்