Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

ஆசிய விளையாட்டுப் போட்டி-  இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டி-  இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

20 புரட்டாசி 2023 புதன் 09:02| பார்வைகள் : 930


சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 23ஆம் திகதி சீனாவின் Hangzhou நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்குகிறது.

இதில் இலங்கை, இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

மொத்தம் 39 விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற உள்ளன. கிரிக்கெட் விளையாட்டும் இதில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் களமிறங்க உள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சஹன் அராச்சிகே கேப்டனாக செயல்பட உள்ளார். விக்கெட் கீப்பராக லஹிரு உதாரா விளையாட உள்ளார்.

அணி விபரம்:

சஹன் அராச்சிகே (கேப்டன்)
லசித் க்ரூஸ்புல்லே
ஷெவோன் டேனியல்
அஷென் பன்டரா
அஹன் விக்ரமசிங்கே
லஹிரு உதாரா (விக்கெட் கீப்பர்)
ரவிந்து பெர்னாண்டோ
ரணிதா லியனாராச்சி
நுவனிது பெர்னாண்டோ
சச்சிதா ஜெயதிலகே
விஜயகாந்த் வியாஸ்காந்த்
நிமேஷ் விமுக்தி
லஹிரு சமரக்கூன்
நுவான் துஷாரா
இஷிதா விஜேசுந்தரா