Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

இறால் குழம்பு

இறால்  குழம்பு

1 கார்த்திகை 2023 புதன் 14:12| பார்வைகள் : 729


இறாலுக்கென்று தனி சுவையும் மணமும் உள்ளது. மீனில் கூட முள் எடுக்கும் வேலை இருக்கிறது. ஆனால் இறாலைப் பொறுத்த வரையில் சுத்தம் செய்வது சிறிது கடினமாக இருந்தாலும் குழந்தைகள் முதல் பல் இல்லாத பெரியவர்கள் வரையில் கூட சுலபமாக சாப்பிட முடியும். இறாலில் என்ன ரெசிபி செய்தாலுமே சுவையாகத்தான் இருக்கும். ஏன் வெறும் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வறுத்தால் கூட சுவை அள்ளும். மீன் குழம்பு சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த இறால் குழம்பு ஏற்றதாக இருக்கும்.


தேவையான பொருட்கள்:

இறால் - 1/4 கிலோ

மிளகாய்த் தூள் - 2 தே.கரண்டி

மல்லித் தூள் - 3 தே.கரண்டி

தேங்காய் - 1/2 மூடி

சோம்பு - 2 தேக்கரண்ட

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 6 தேக்கரண்டி

செய்முறை:

இறாலை கழுவி சுத்தப்படுத்தவும். தேங்காய். சோம்பு சேர்த்து அரைக்கவும்.ஒரு வாணலியில் 6 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் இறாலைப் போடவும் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி சேர்க்கவும். அரைத்த தேங்காய், சோம்பு விழுதை சேர்க்கவும்.

வாணலியை மூடி வைத்து வேகவிடவும். இறால் வெந்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கினால் சுவையான இறால்  குழம்பு தயார்.