Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

இளமையாக இருக்க அமெரிக்க கோடீஸ்வரர் செய்த செயல்...

இளமையாக இருக்க அமெரிக்க கோடீஸ்வரர் செய்த செயல்...

28 புரட்டாசி 2023 வியாழன் 07:09| பார்வைகள் : 711


அமெரிக்க கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

சுமார் 3300 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியான பிரையன் ஜான்சன், தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளும் முயற்சிக்கு தினமும் 16 கோடி ரூபாய் செலவழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

46 வயதான தனது உடல் உறுப்புகள் 18 வயதினர் போல செயல்பட வேண்டும் என்ற முடிவுடன் தினமும் 111 மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாகவும் தனது டீன்-ஏஜ் மகனின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து தனது உடலில் செலுத்திக் கொண்டிருப்பதாகவும் பிரையன் ஜான்சன் கூறியுள்ளார்.

கொலாஜன், ஸ்பெர்மிடின், கிரியேட்டின் போன்றவை அடங்கிய கிரீன் ஜெயன்ட் என்ற ஸ்மூத்தியை தினசரி உட்கொள்ளும் அவர், உடல் கொழுப்பு பரிசோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற மருத்துவ உபகரணங்களுடன் தம்மை கண்காணித்துக் கொள்ள 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவையும் நியமித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது உடல் அதிரக் கூடாது என்பதற்காக மணிக்கு வெறும் 16 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே தமது சொகுசு காரை இயக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.