Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

ஏர்முனையின் வெற்றி

ஏர்முனையின் வெற்றி

3 ஆடி 2023 திங்கள் 02:53| பார்வைகள் : 5420


விவசாயம் தான் நாட்டின்
முதுகெலும்பு என்று
காந்தி மகான் சொன்னது
நிதர்சனம் பெற்றுள்ளது ...!!!
 
மக்களாட்சியில்
மக்களின் குரலை
மகேசன் மதிக்க வேண்டும்
 
நாட்டின் சட்டங்கள்
மக்களின் நன்மையை
கருத்தில் கொண்டுதான்
இருக்க வேண்டும் ...!!
 
நியாயங்கள் என்றும்
தோற்பதில்லை
அகிம்சை முறை
போராட்டங்கள் முடிவில்
வெற்றி கனியை பறிக்கும்..!!
 
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
என்று பாரதி சொன்னதுபோல்
விவசாயிகள் ஒன்றுபட்டு
போராடி தங்களின்
கோரிக்கையை
வென்றுள்ளார்கள்
வாழ்த்துக்கள் ...!!
 
ஏர் ஓட்டம் இல்லையென்றால்
தேர் ஓட்டம் இல்லை என்பதை
எல்லோரும் நினைவில் வைத்து
நாட்டின் விவசாயத்தை
பாதுகாக்க சபதம் கொள்வோம்...!!

எழுத்துரு விளம்பரங்கள்