Paristamil Navigation Paristamil user login Paristamil advert login
ஒரே படத்தில் விஜய், ஷாரூக்கான்..?

ஒரே படத்தில் விஜய், ஷாரூக்கான்..?

ஒரே படத்தில் விஜய், ஷாரூக்கான்..?

17 புரட்டாசி 2023 ஞாயிறு 15:42| பார்வைகள் : 280


பிரபல தமிழ் இயக்குனரான அட்லீ இந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் வசூலிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து தங்களை வைத்து படம் பண்ணுமாறு அட்லீயை நெருக்கி வருகிறார்களாம் பாலிவுட் நடிகர்கள் பலர்.

ஜவான் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் வருவதாக கசிந்த தகவல்களால் விஜய் ரசிகர்கள் பலரும் திரையரங்குக்கு படையெடுத்த நிலையில் படத்தில் விஜய் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் விஜய் கேமியோ இல்லாதது குறித்து அட்லீ பேசியுள்ளார்.

அதில் அவர் “ஜவான் படத்தில் கேமியோ ரோல் செய்ய நான் விஜய்யிடம் கேட்காததற்கு காரணம் உண்டு. விஜய் – ஷாரூக்கான் இருவருமே எனக்கு வாழ்நாள் திருப்பம் அளித்தவர்கள். இருவரையும் ஒரே படத்தில் கொண்டு வரும் வகையில் திரைக்கதையை ஒருநாள் எழுதுவேன்” என தெரிவித்துள்ளார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்