Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

ஓநாயை போல் உருவமாறிய மனிதன்....

ஓநாயை போல் உருவமாறிய மனிதன்....

3 ஆவணி 2023 வியாழன் 04:44| பார்வைகள் : 500


ஜப்பானை சேர்ந்த யூடியூப்பர் ஒருவர் நாய் போன்ற உடை அணிந்து பூங்காவில் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் ஓநாய் போன்ற தோற்றத்தில் ஒருவர் உலா வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

டோருஉவேடா என்ற அந்த என்ஜினீயருக்கு சிறு வயது முதலே ஓநாய்கள் மீது அதிக பற்று உண்டாம்.

அதன் காரணமாக தானும் ஓநாயை போல மாற வேண்டும் என ஆசைப்பட்ட அவர் ஓநாய் போல் நடிக்க 3,000,000 யென் (ரூ. 18.5 லட்சம்) செலவு செய்து ஓநாய் போன்ற தோற்றத்தில் ஆடையை வடிவமைத்து பெற்றுள்ளார்.

ஓநாய் உடையில் அவர் நடந்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது உருவமாற்றம் குறித்து உவேடா கூறுகையில்,

நான் மனித உறவுகளில் இருந்து விடுபட்டுள்ளேன். வேலை மற்றும் பிற விடயங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் மறக்க இது உதவுகிறது. இந்த உடை அணிவது பவர்புல் அனுபவமாக இருக்கிறது.

கண்ணாடியில் இந்த உடையை பார்க்கும் போது நான் ஒரு ஓநாயை பார்ப்பது போலவே உள்ளது என தெரிவித்துள்ளார்.