Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமடைந்ததால் ஏற்பட்ட நெருக்கடி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமடைந்ததால்  ஏற்பட்ட நெருக்கடி

29 புரட்டாசி 2023 வெள்ளி 12:18| பார்வைகள் : 1055


விமானங்கள் தாமதமடைந்தமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிப்பதற்காக காத்திருந்த, பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழில்நுட்பகோளாறு மற்றும் ஏனைய காரணங்களால் பல விமானங்கள் பயணிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இருந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்கவிருந்த விமான சேவைகளிலே இந்த தாமத நிலை ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாகவும் விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.