Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

காசாவின் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

காசாவின் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

19 கார்த்திகை 2023 ஞாயிறு 10:02| பார்வைகள் : 453


காசாவின் அல்சிபா வைத்தியசாலையிலிருந்து சில நோயாளர்கள் உட்பட அதிகமானோர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையின் அதிகாரிகள் அவர்களை வெளியேறுமாறு பணித்ததாக குறிப்பிடப்படுகிறது.

இடிபாடுகள் நிறைந்த தெருக்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் எழுப்பியபடி பலர் நடந்து செல்வதைக் காண முடிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேலியப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவின் வடக்கு பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்டுவரும் ஜபாலியா ஏதிலிகள் முகாமில் உள்ள பாடசாலையின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.