Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

காஸாவில் பேர­வலம் : தோற்று விட்­டதா உலகம் ?

காஸாவில் பேர­வலம் : தோற்று விட்­டதா உலகம் ?

23 ஐப்பசி 2023 திங்கள் 02:22| பார்வைகள் : 1061


மனி­த­கு­லத்தின் உச்ச தோல்வி எது­வென்றால், தயக்­க­மின்றி காஸாவின் மீது விரல் நீட்­டலாம்.

அங்கு நிகழும் மனிதப் பேர­வ­லத்தை விப­ரிக்கும் அவ­சியம் கிடை­யாது. அது ஏறத்­தாழ முழு உல­கமும் அறிந்­ததே.

தீவிரம் அறிந்தும் பேர­வ­லத்தைத் தடுத்து நிறுத்த முடி­யாத உலக ஒழுங்கும், சர்­வ­தேச ராஜ­தந்­தி­ரமும் மனித குல வளர்ச்­சியின் சாபம்.

வர­லாறு நெடு­கிலும் இழைக்­கப்­பட்ட தவ­று­களால், இன்று பலஸ்­தீன மக்கள் தாம் வாழ வேண்­டிய மண்ணில் அக­தி­க­ளாக இருக்­கி­றார்கள். அதுவும் நிரூ­பிக்­கப்­பட்ட உண்மை.

இன்று காஸாவில் அடைத்து வைக்­கப்­பட்டு, இஸ்­ரே­லிய படை­களால் முற்­று­கை­யி­டப்­பட்­டுள்ள பலஸ்­தீ­னர்­க­ளுக்கு நாளை என்­ன­வாகும்? எத்­தனை பேர் உயி­ருடன் இருக்கப் போகி­றார்கள்?

உலக சமா­தா­னத்­திற்கும், பாது­காப்­பிற்கும் பொறுப்­பான பிர­தான அமைப்­பாக ஐக்­கிய நாடுகள் சபை.

ஐ.நா. பாது­காப்புச் சபை இரு தட­வைகள் கூடி­யது. ஒக்­டோபர் 8ஆம் திகதி ஒரு தடவை, 13ஆம் திகதி மறு­த­டவை.

எது­வித தயை தாட்­சண்­யமும் இன்றி, இஸ்ரேல் குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்தி வரும் சந்­தர்ப்­பத்தில், கூடி­ய­வர்கள் கலைந்து சென்­றார்கள்.

உட­னடி போர் நிறுத்தம் கோரி ரஷ்ய பிர­தி­நிதி சமர்ப்­பித்த நகல் பிரே­ரணை, வீட்டோ அதி­கா­ரத்தால் ரத்துச் செய்­யப்­பட்டு, குப்பைக் கூடைக்குள் சென்­றது.

அடுத்த கூட்டம் மூடிய அறைக்குள் இடம்­பெற்­றது.

காஸா நிலப்­ப­ரப்­பிற்கு உணவு, குடிநீர், எரி­பொருள் உள்­ளிட்ட எந்­த­வொரு பொரு­ளையும் அனுப்பப் போவ­தில்­லை­யென இஸ்ரேல் தீர்­மா­னித்­தி­ருந்த நேரம்.

இஸ்­ரேலின் தாக்­கு­தலில் ஆயி­ரக்­க­ணக்­கான பலஸ்­தீ­னர்கள் - அதுவும் அனே­க­மான சிறு­வர்கள் - கொல்­லப்­பட்­டி­ருந்த பின்­புலம்.

மூடிய அறையில் கூடி­ய­வர்­க­ளுக்கு கொஞ்­ச­மேனும் மன­சாட்சி இருந்­தி­ருக்­கலாம். மன­மொன்­று­பட்டு, இரத்­த­க­ள­ரியை நிறுத்த வேண்டும் என தீர்­மா­னித்­தி­ருக்­கலாம்.

ஆனால், ஒன்­று­கூ­டி­ய­வர்­க­ளுக்கு அவ­ரவர் அர­சியல் முக்­கி­ய­மா­ன­தாக இருந்­தது. மேலைத்­தேய நாடுகள் ஹமாஸைக் கண்­டிப்­பதில் குறி­யாக இருந்­தன.

மக்­களை சாவின் பிடியில் இருந்து காப்­பாற்­று­வதை விடவும் எது பயங்­க­ர­வாதம் என்ற கேள்­விக்கு பதில் தேடு­வதில் மேலைத்­தேய இரா­ஜ­தந்­தி­ரிகள் அக்­கறை காட்­டி­னார்கள்.

அன்று பாது­காப்புச் சபையின் அங்­கத்­துவ நாடுகள் ஐக்­கி­யப்­பட்டு, குறைந்­த­பட்சம் தாக்­கு­தலை நிறுத்­து­மாறு இஸ்­ரேலை எச்­ச­ரிக்­கக்­கூ­டிய தீர்­மா­னத்தை ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றி­யி­ருக்­கலாம்.

அத்­த­கைய தீர்­மானம் இஸ்­ரேலின் கண்­மூடித்­த­ன­மான படைக் குவிப்­பையும், ரொக்கட் தாக்­கு­த­லையும் சற்­றேனும் தடுத்து நிறுத்­தி­யி­ருக்கும்.

ஒரு­வேளை, ஒரு வைத்­தி­ய­சா­லையில் நூற்­றுக்­க­ணக்­கான உயிர்கள் பலி­கொண்ட தாக்­குதல் நிக­ழக்­கூ­டிய சூழ்­நி­லையை இல்­லாமல் செய்­வதில் தாக்கம் செலுத்­தி­யி­ருக்­கவும் கூடும்.

இன்று ஐக்­கிய நாடுகள் சபையால் செய்ய முடிந்­த­தெல்லாம், வன்­முறை பற்றி கவ­லைப்­பட்டு அறிக்கை விடு­வதும், காஸா மக்­க­ளுக்கு தேவை­யான பொருட்­களை அனுப்­பு­மாறு கோரிக்கை விடுப்­பதும் தான்.

பலஸ்­தீ­னர்­களின் நெருக்­கடி என்­பது பாது­காப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் ஆரம்­ப­கா­லத்தில் இருந்து இடம்­பி­டித்த விடயம்.

இன்று ஏழு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக பலஸ்­தீ­னர்கள் அனு­ப­வித்து வரும் பேர­வ­லங்­களைப் போன்று எந்­த­வொரு இனக்­கு­ழு­மமும் கஷ்­டப்­பட்டு இருக்க மாட்­டாது.

இந்த மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்­டதைப் போன்று எந்­த­வொரு மக்கள் கூட்­டத்­திற்கும் அநீதி இழைக்­கப்­பட்­டி­ருக்க மாட்­டாது.

இருந்­த­போ­திலும், இன்­று­கூட காஸாவில் வாழும் 23 இலட்சம் பலஸ்­தீ­னர்­களின் இருப்பைக் கேள்­விக்கு உட்­ப­டுத்­தக்­கூ­டிய அரா­ஜ­கங்கள் பற்றி ஐ.நா. பாது­காப்புச் சபையால் எதுவும் செய்ய முடி­யாத சூழ்­நிலை.

காஸா மக்கள்  இன்­றுள்ள அவல நிலைக்கு இஸ்­ரேலின் அடா­வ­டித்­த­னமும், மேற்­கு­லகின் அரா­ஜ­கமும் தான் காரணம் என்றால், ஐநாவின் பாது­காப்புச் சபை­யிலும், பொதுச்­ச­பை­யிலும் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களைத் தாண்­டியே சகல நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இன்­றைய இஸ்­ரே­லிய பலஸ்­தீன நெருக்­க­டியைப் பொறுத்­த­வ­ரையில், எதுவும் செய்ய முடி­யாத நிலையில் ஐக்­கிய நாடுகள் சபை உள்­ள­தாயின், எதையும் செய்­யக்­கூ­டிய ஜாம்­ப­வ­னாக தன்னைக் காட்டிக் கொள்­வது அமெ­ரிக்கா தான்.

மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் எவரும் சவால் விடுக்க முடி­யாத சக்­தி­யாக உரு­வெ­டுத்து, தமது தேவை­களை நிறை­வேற்­றக்­கூ­டிய பிராந்­திய ஒழுங்கை உரு­வாக்க முனைந்­தது, அன்றும் இன்றும் அமெ­ரிக்­காவே தான்.

அன்று அமெ­ரிக்கா விட்ட தவ­று­களை சற்று மறந்து விடுவோம். இன்­றைய நிலை­மையை ஆராய்வோம்.

ஆண்­டாண்டு கால ஒடுக்­கு­மு­றை­க­ளையும், அநீ­தி­க­ளையும்  ஒதுக்கி விட்டுப் பார்த்தால் கூட, இன்­றைய ஆயுத நெருக்­க­டியின் தொடக்­கப்­புள்ளி ஹமாஸ் இயக்கம் காஸாவைத் தாண்டி இஸ்­ரே­லிய படைகள் மீதும் மக்கள் மீதும் நடத்­திய தாக்­குதல் தான்.

இந்தப் புள்ளி நோக்கி ஹமாஸ் இயக்கம் ஏன் தள்­ளப்­பட்­டது என்­பதை ஆராய்ந்தால், அது அமெ­ரிக்­காவின் குள்­ள­ந­ரித்­த­னத்தால் விளைந்த சூழல்தானெனப் புரிந்து கொள்ள முடியும்.

மத்­திய கிழக்கில் தமக்கு சாதக­மான அர­சியல் ஒழுங்கை உரு­வாக்கி விட்ட அமெ­ரிக்­கா­விற்கு வெளி­வி­வ­காரக் கொள்­கை­களில் இஸ்­ரே­லிய, பலஸ்­தீன நெருக்­க­டியை விடவும் சீனா முக்­கி­ய­மா­ன­தாக மாறி­யது.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜோ பைடன் வெளி­யிட்ட இடைக்­கால தேசிய பாது­காப்பு வழி­காட்­டலில், மத்­திய கிழக்கை பின்­னுக்குத் தள்வி விட்டு சீனாவை முன்­னுக்கு கொண்டு வந்­தி­ருந்தார்.

ஏதோ­வொரு பிரச்­சி­னையில் தலை­யிடும் தரப்பு, அந்தப் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­காக மேற்­கொள்ளும் தவ­றான தீர்­மா­னத்தை விடவும், எதுவும் செய்­யாமல் இருப்­பது அதிக பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்­பது மத்­திய கிழக்கு விவ­கா­ரத்தில் நிரூ­ப­ண­மா­னது.

இஸ்­ரே­லியப் பிர­தமர் பெஞ்­சமின் நெத்­தன்­யா­ஹுவின் அர­சாங்கம் கடந்த காலங்­களை விடவும் தீவி­ர­மான முறையில் குடி­யி­ருப்­புக்­களை அமைத்து வரு­வதை ஜோ பைடன் கவ­னித்­தி­ருக்க வேண்டும். கண்­டித்­தி­ருக்க வேண்டும்.

பெஞ்­சமின் நெத்­தன்­யாஹு தேர்தல் வெற்­றிக்­காக மிகவும் தீவிர வலது சாரிக் கொள்­கை­களை அனு­ச­ரிக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளோடு கூட்டு சேர்­வதால் ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வு­களை அனு­மா­னித்­தி­ருக்க வேண்டும். மத­ரீ­தி­யான ஸியோ­னி­ஸத்தைத்  தூண்டும் ஒருவர் அல் அக்ஸா பள்­ளி­வா­ச­லுக்கு சென்று ஹமாஸ் இயக்­கத்தை ஆத்­தி­ரப்­ப­டுத்­தி­ய­போது, இந்த மாதி­ரி­யான செயல்கள் கூடா­தென கண்­டித்­தி­ருக்க வேண்டும்.

மத்­திய கிழக்கு நெருக்­க­டிக்கு இரா­ஜ­தந்­திர தீர்வு காண வேண்டும் என்­பதில் அதீத ஆர்வம் காட்டி வரு­பவர், ஜோன் கெரி என்ற இரா­ஜ­தந்­திரி.

இவர் நெத்­தன்­யா­ஹு­வுடன் 375 தட­வை­களும், பலஸ்­தீன அதி­கா­ர­ச­பையின் தலைவர் மஹ்மூத் அப்­பா­ஸுடன் 34 தட­வை­களும் பேசி­யவர். இஸ்­ரே­லுக்கு 40 தட­வைகள் விஜயம் செய்­தி­ருக்­கிறார்.

எங்கே அபாயம் நிக­ழக்­கூ­டிய ஆபத்து இருக்­கி­றதோ, அங்கு மௌனம் காப்­பதும் மெத்­தனப் போக்­காக நடந்து கொள்­வதும் மிகவும் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும். இது மத்­திய கிழக்கு விவ­கா­ரத்தில் அப்­பட்­ட­மான உண்மை என்­பதை ஜோன் கெரி தெளி­வாக எடுத்­து­ரைத்­துள்ளார்.

இன்று ஜோன் கெரியின் ஆலோ­சனை எங்கே போனது?

ஜோ பைட­னுக்குத் தேவைப்­பட்­ட­தெல்லாம், மத்­திய கிழக்கை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, சீனாவை சமா­ளிக்க கொள்­கை­களை வகுப்­பது தான்.

இதற்­காக டொனால்ட் ட்ரம்ப் ஆரம்­பித்த திட்­டத்தை அவர் கையில் எடுத்தார். மத்­திய கிழக்குப் பிராந்­தி­யத்தில் உள்ள அரே­பிய முஸ்லிம் நாடு­க­ளுடன் இஸ்­ரேலை கைகோர்க்கச் செய்து விட்டு, அங்­கி­ருந்து சூச­க­மாக வேறு பக்கம் பார்­வையைத் திருப்­பு­வது அவ­ரது நோக்கம்.

மத­ரீ­தி­யான வர­லாற்றுக் கார­ணங்­களின் அடிப்­ப­டையில் யூதர்­களும் இஸ்­லா­மி­யர்­களும் ஒன்­றென்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக ஆப்­ரஹாம் உடன்­ப­டிக்­கைகள் உரு­வாக்­கப்­பட்­டன.

இந்த உடன்­ப­டிக்­கை­களில் ஐக்­கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரேன், மொரொக்கோ சூடான் போன்ற நாடு­களை இணைத்து இஸ்­ரே­லுடன் கைகோர்க்கச் செய்­வது பைடனின் இரா­ஜ­தந்­திரம்.

மத்­திய கிழக்கில் சமா­தா­னத்தைக் கொண்டு வரும் உடன்­ப­டிக்­கை­களில் பலஸ்­தீ­னர்கள் இருக்­க­வில்லை என்­பது மிகவும் கசப்­பான உண்மை.

கடந்த புதன்­கி­ழமை ஜெரு­ச­லே­மிற்கு சென்று எதுவோ வேதம் ஒது­வதைப் போல ஜோ பைடன் எதையோ சொல்லி விட்டுப் போயி­ருக்­கிறார்.

இந்த விட­யங்­களில் காஸாவில் வாழும் மக்­களின் பேர­வ­லத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கக்­கூ­டிய எதுவும் கிடை­யாது.

அமெ­ரிக்கா தான் அப்­ப­டி­யென்றால், பெரும்­பா­லான முஸ்லிம் நாடு­களும் இஸ்­ரேலைக் கண்­டிப்­பதைத் தாண்டி எது­வுமே செய்­வ­தாகத் தெரி­ய­வில்லை.

ஜோ பைடன் ஜோர்­தானில் முஸ்லிம் நாடு­களின் தலை­வர்­க­ளுடன் நடத்­த­வி­ருந்த சந்­திப்பு ரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளது. ஓ.ஐ.சி. எனப்­படும் இஸ்­லா­மிய நாடுகள் ஸ்தாப­னமும், அரே­பிய லீக்கும் கண்­டன வார்த்­தை­க­ளுடன் அறிக்கை விட்­டுள்­ளன.

சவூதி அரே­பிய இள­வ­ர­சரும், ஈரா­னிய ஜனா­தி­ப­தியும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லா­ளரை சவூதி வெளி­வி­வ­கார அமைச்சர் சந்­திப்பார் என கூறப்­ப­டு­கி­றது. காஸாவை முற்­று­கை­யிட்டால் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கும் என ஈரானிய ஜனாதிபதி எச்சரித்துள்ளர்.

ஆனால், இஸ்ரேலுக்கு கடிவாளம் இடுமாறு அமெரிக்காவின் மீது அழுத்தத்தைத் தொடுக்கக்கூடிய நிலையில் உள்ள இஸ்லாமிய நாடுகள் கூட்டாக எதனையும் செய்யவில்லை.

பல முஸ்லிம் நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன் நோர்வே முதலான மேலைத்தேய நாடுகளிலும் மக்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

உலகளாவிய ரீதியில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அலையொன்று எழுவதாகத் தோன்றியபோதிலும், அது மேலைத்தேய நாடுகளின் அரசியல் தலைவர்களின் நிலைப்பாட்டை அசைப்பதாகத் தெரியவில்லை.

இது காஸாவிலாகட்டும், மேற்குக் கரையிலாகட்டும், சகல பலஸ்தீனர்களும் தம்மைத் தாமே காத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு வேறு வழியின்றி தீவிர வன்முறைகளின் பக்கம் வேண்டிய சாத்தியத்தையே உருவாக்கியுள்ளது.

நன்றி வீரகேசரி