Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

கீரை பக்கோடா

கீரை பக்கோடா

2 ஆவணி 2023 புதன் 06:15| பார்வைகள் : 1431


 டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுட சுட கீரை பக்கோடா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

தேவையான பொருட்கள் 

1 கை பிடி கீரை 

1 வெங்காயம் 

3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு 

1 டீஸ்பூன் மிளகு 

1 டீஸ்பூன் சீரகம் 

எண்ணெய் பொரிக்க தேவையான அளவு 

உப்பு தேவையான அளவு 

செய்முறை 

 முதலில் பொரிக்க மற்றும் கீரை இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 

 அடுத்து ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டையும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். 

 பிறகு ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, மற்றும் தேவையான அளவு உப்பு, வதக்கிய கீரை, மிளகு, சீரகம் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.  

அடுத்து பொரிக்க தேவையான அளவு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கீரையை கிள்ளி போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும். 

 இப்பொழுது சுவையான கீரை பக்கோடா தயார்.


 

எழுத்துரு விளம்பரங்கள்