Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

கொழும்பில் திருடர்களைத் துரத்திச் சென்ற கட்டிடத்தொழிலாளிக்கு நேர்ந்த கதி

கொழும்பில் திருடர்களைத் துரத்திச் சென்ற கட்டிடத்தொழிலாளிக்கு நேர்ந்த கதி

29 புரட்டாசி 2023 வெள்ளி 07:31| பார்வைகள் : 1008


கல்கிஸ்சையில் கட்டிடத்தொழிலாளி ஒருவர், திருடனின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இரு திருடர்களைத் துரத்திச் சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளால்.

மொனராகலை நமுனுகுல பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.தனுஷ்க ருவன் குமார என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கட்டடத் தொழிலாளிகள் தங்கும் பகுதிக்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் அங்கிருந்த கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்ற போது இரு கட்டிடத் தொழிலாளர்கள் திருடர்களை துரத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இருவரும் 100 மீற்றர் தூரம் வரை துரத்திச் சென்று இரண்டு திருடர்களையும் பிடித்துள்ளனர். திருடர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியால் கட்டிடத் தொழிலாளி ஒருவரின் மார்பில் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்சை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.