Paristamil Navigation Paristamil user login Paristamil advert login
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த இலக்கு..

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த இலக்கு..

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த இலக்கு..

27 ஆவணி 2023 ஞாயிறு 10:20| பார்வைகள் : 1317


இஸ்ரோ அடுத்த மாதம் ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது.
 
 
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வெற்றிகரமாக தனது ஆய்வுப் பணியைத் தொடங்கியது.
 
இஸ்ரோவின் இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தை, இஸ்ரோ அடுத்த மாதம் 2ஆம் திகதி விண்ணில் செலுத்தி திட்டமிட்டுள்ளது. 
 
இதுகுறித்து விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனர் நிலேஷ் எம்.தேசாய் கூறுகையில், 'ஆதித்யா எல்1 தயார் நிலையில் உள்ளது, செப்டம்பர் 2ஆம் திகதி விண்ணில் ஏவ வாய்ப்பு உள்ளது' என தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரோவின் கனவு திட்டம்
ஆதித்யா எல்1 என்பது இஸ்ரோவின் கனவு திட்டமாகும். இதன் முதற்கட்ட சோதனைகள் 2020ஆம் ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டது.
 
1,475 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம் , பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் பூமியில் இருந்து, சுமார் 1.5 மில்லியன் கிலோ மீற்றர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-யில் நிலைநிறுத்தப்பட உள்ளது. 
 
இந்த விண்கலம் மூலம் சூரிய புயல்கள், பூமியில் ஏற்படும் மாற்றங்கள் ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.     
 

எழுத்துரு விளம்பரங்கள்