Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

சீன பொருட்களுக்குத்தான் நீண்ட ஆயுசு கிடையாதே!

சீன பொருட்களுக்குத்தான் நீண்ட ஆயுசு கிடையாதே!

14 கார்த்திகை 2023 செவ்வாய் 02:22| பார்வைகள் : 493


சோனுவும், அவர் காதலியும் ஒரு பூங்காவில் சந்தித்துக் கொண்டார்கள். தனது காதலி வழக்கமான இந்திய பெண்களைவிட சற்று வித்தியாச முக அம்சம் கொண்டவர் என்பதை சோனு ரொம்ப நாளாகவே கவனித்து வந்தார். இன்று நல்ல மூடில் இருக்கும்போது கேட்டுவிட வேண்டியதுதான் என முடிவு செய்து கொண்டார். 

சோனு: உன்னை பார்த்தால், சீனப் பெண்ணின் சாயல் தெரிகிறதே. ஏன் அப்படி இருக்கிறாய்?

காதலி: என் தந்தை சீனாவைச் சேர்ந்தவர். ஒருவேளை அவர் முகசாயல் இருக்கும்.

சோனு: அடிப்பாவி.. சொல்லவே இல்ல.. ஒருமுறை கூட அவரை எனக்கு அறிமுகப்படுத்தவில்லையே?

காதலி (சோகமாக): அவர் இப்போது இந்த உலகில் இல்லை.. நான் பிறந்த 2 வருடங்களிலேயே இறந்துவிட்டாராம்.

சோனு (யோசனையுடன்): ஆமா.. ஆமா.. சீன பொருட்களுக்குத்தான் நீண்ட ஆயுசு கிடையாதே!

சோனு சொன்னதை கேட்ட காதலி, சோகத்தை மறந்து கொல்லென சிரிக்க.. அந்த இடமே ஆரவாரமாக மாறியது.