Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை..? நிதிஷ்குமார்-லாலு பிரசாத் யாதவ் சந்திப்பு

தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை..? நிதிஷ்குமார்-லாலு பிரசாத் யாதவ் சந்திப்பு

29 புரட்டாசி 2023 வெள்ளி 06:55| பார்வைகள் : 568


தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு இடையே பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று லாலு பிரசாத் யாதவை நேற்று சந்தித்து பேசினார்.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அதிகாரப்பூர்வ இல்லம் பாட்னா நகரின் அனே மார்க்கில் உள்ளது. நேற்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. 

கடந்த நான்கு நாட்களில் இரு தலைவர்களும் இரண்டாவது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். 

இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசுவது அரசியல் வட்டாரத்தில் பல யூகங்களை ஏற்படுத்தி உள்ளன.