Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

பயிற்சியில் ஈடுபட்டிருந்த - இராணுவ வீரர் பலி!

பயிற்சியில் ஈடுபட்டிருந்த -  இராணுவ வீரர் பலி!

30 புரட்டாசி 2023 சனி 12:48| பார்வைகள் : 2199


இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். Pamiers (Ariège) இராணுவ தளத்தில் கடமையாற்றும் வீரர் ஒருவரே பலியாகியுள்ளார். 

172 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய Nathanaël Bonnemere எனும் வீரரே பலியாகியுள்ளார். அவர் நேற்று வெள்ளிக்கிழமை Pujols (Lot-et-Garonne) நகரில் வைத்து பரசூட் (parachute) மூலம் குதித்து சாகசத்தில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அவர் இதுவரை 239 தடவைகள் இதுபோன்ற சாகச நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில், நேற்றைய நாள் துரதிஷ்ட்டவசமாக அமைந்துள்ளது என அவரது படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

அதேவேளை, இராணுவத்தில் அவர் இராணுவ வீரர்களுக்கான தாதியாக பணிபுரிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அவரது மறைவுக்கு உள்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.