Paristamil Navigation Paristamil user login Paristamil advert login
பரிஸ் : காவல்துறை போன்று வேடமணிந்து வழிப்பறி - ஒருவர் கைது!!

பரிஸ் : காவல்துறை போன்று வேடமணிந்து வழிப்பறி - ஒருவர் கைது!!

பரிஸ் : காவல்துறை போன்று வேடமணிந்து வழிப்பறி - ஒருவர் கைது!!

18 புரட்டாசி 2023 திங்கள் 14:23| பார்வைகள் : 1500


காவல்துறையினர் போன்று வேடமணிந்து வாகன சாரதிகளிடம் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சனிக்கிழமை மாலை பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாலை 7.30 மணி அளவில் பரிசின் வடக்குப் பகுதியில் உள்ள வீதி ஒன்றில் காவல்துறையினர் போன்று வேடமணிந்த ஒருவர், வீதியில் சென்ற வாகனங்களை வழி மறித்துள்ளார். காவல்துறையினர் பயன்படுத்தும் Flashlight இனை பயன்படுத்தி வாகன சாரதிகளை நிறுத்தியுள்ளார். பின்னர் அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளார். 

அவரது தாக்குதலில் வாடகை மகிழுந்து (VTC) சாரதி ஒருவர் காயமடைந்துள்ளார். பின்னர் அவரே உண்மையான காவல்துறையினரையும் அழைத்துள்ளார். 

விரைந்து வந்த காவல்துறையினர் இரவு 10 மணி அளவில் இந்த போலி காவல்துறை வீரரைக் கைது செய்தனர்.