Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

பிரான்சில் ஒரு மருத்துவ சாதனை குரல்வளை அறுவைச் சிகிச்சை.

பிரான்சில் ஒரு மருத்துவ சாதனை குரல்வளை அறுவைச் சிகிச்சை.

20 கார்த்திகை 2023 திங்கள் 19:00| பார்வைகள் : 2164


கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இருதய அறுவைச் சிகிச்சையின் பாதிப்பால் 49 வயதான Karine எனும் பெண்மணி தன் பேச்சு திறனை படிப்படியாக இழந்து சுவாசிக்க, கருவிகளின் உதவியுடன் பேச  முடியாத நிலைக்கு சென்றுள்ளார்.

தான் மீண்டும் பேசுவேன் என்னும் நம்பிக்கையுடன் பல முயற்சிகளை, பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். நம்பிக்கை தளரவில்லை.

கடந்த செப்டம்பர் முதலாம் திகதி Lyonல் உள்ள (University Hospital) பல்கலைக்கழக மருத்துவமனையான Edouard-Herriot மருத்துவமனையின் சிறுநீரகம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலைவரான பேராசிரியர் Céruse மற்றும் அவரது சக ஊழியர் Lionel Badet ஆகியோர் அடங்கிய 12 அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சுமார் 50க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்கள் கொண்ட குழு அவருக்கான குரல்வளை அறுவைச் சிகிச்சை நடத்தியது.

27 மணிநேரங்கள் நடந்த அறுவைச் சிகிச்சையின் பின்னர் பிரான்சில் மருத்துவ சாதனை நிகழ்த்தப்பட்டது. Karine இன்று மெல்ல பேசத் தொடங்கினார் ("Mes filles ne m'avaient jamais entendue parler.") "நான் பேசுவதை என் மகள்கள் கேட்டதில்லை" என தன் முதல் வார்த்தையை அறுவைசிகிச்சை யின் பின்னர் பேசியுள்ளார். அவர் முழுமையாக பேசுவதற்கு ஒராண்டு காலம் பயிற்சிகள் வேண்டும் என சொல்லப்படுகிறது.