Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

பீனட் பட்டர்...

பீனட் பட்டர்...

30 ஆடி 2023 ஞாயிறு 06:30| பார்வைகள் : 1362


குழந்தைகளுக்கு விருப்பமான பீனட் பட்டரை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள்

வறுத்த வேர்க்கடலை - 2 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை 
தேன் - 2 தேக்கரண்டி 
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

செய்முறை

மிக்சியில் 1/2 கப் வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

அதே மிக்சியில் 2 கப் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

அடுத்து எண்ணெய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.  

பிறகு அதில் தேன், உப்பு, சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்து கொள்ளவும்.

கடைசியாக கொரகொரப்பா பொடித்த வேர்க்கடலையை சேர்த்து ஒரு முறை மிக்சியில் சுற்றி கொள்ளவும்.

இப்போது சுவையான பீனட் பட்டர் தயார்.