Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

புதிய சாதனையை நிலை நாட்டிய ஹரி கேன்! 

புதிய சாதனையை நிலை நாட்டிய ஹரி கேன்! 

24 புரட்டாசி 2023 ஞாயிறு 08:55| பார்வைகள் : 854


பாயர்ன் முனிச் அணிக்காக பாயர்ன் லீக் தொடர்களில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஹரி கேன் படைத்துள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் ஹரி கேன், ஜேர்மனியின் கிளப் அணியான பாயர்ன் முனிச்சில் விளையாடி வருகிறார். 

மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேன், போச்சம் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்தார். 

இதன்மூலம் 59 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்துள்ளார். 

பாயர்ன் அணியின் முன்னாள் வீரர் ஜெர்ட் முல்லர், பாயர்ன் தொடர்களில் தனது முதல் 5 ஆட்டங்களில் 5 கோல்கள் அடித்து சாதனை படைத்திருந்தார்.

அதனை தற்போது கேன் முறியடித்துள்ளார்.

மேலும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த மரியோ மாண்ட்சுகிக், மிரோஸ்லாவ் க்ளோஸ் ஆகியோரையும் ஹரி கேன் பின்னுக்குத் தள்ளியுள்ளார். 

VfL போச்சம் அணிக்கு எதிராக 7-0 என வெற்றி பெற்றது குறித்து ஹரி கேன் தனது ட்விட்டர் பக்கத்தில், புதிதாக ஹாட்ரிக் Collection என்னவொரு குழு செயல்திறன் என குறிப்பிட்டிருந்தார்.