Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

பெரும் தீ - பல மணிநேரமாகப் போராடும் தீயணைப்பு வீரர்கள்!

பெரும் தீ - பல மணிநேரமாகப் போராடும் தீயணைப்பு வீரர்கள்!

1 ஐப்பசி 2023 ஞாயிறு 09:14| பார்வைகள் : 2049


ருவான் நகரத்தில் (Rouen) உள்ள Saint-Julien பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இங்கிருக்கும் ஒரு எட்டு மாடிக் கட்டத்தில் நேற்று மாபற்றிக்கொண்ட தீ மிகவேகமாகப் பரவி உள்ளது. நேற்று மாலை 18h00 மணியளவில் கைவிடப்பட்ட இந்தக் கட்டத்தில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்புப் படைவீரர்கள் போராடி வருகின்றனர்.

இங்கு பற்றிய தீ அருகில் இருந்த அடுத் பெரும் குடியிருப்புக் கட்டடத்திலும் பரவி உள்ளது. அதிஸ்வசமாக இந்தக் கட்டடமும் கைவிடப்ப்பட்ட கட்டமாகும். இதனால் உயிரச்தேசங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு கட்டங்களில் ஒன்று நள்ளிரவிற்கு மேல் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது. இரண்டாவதும் இடியும் ஆபத்து உள்ளாதால் தொடர்ந்தும் தீயணைப்புப் படையினர் தீ அடுத்த கட்டங்களிறகுப் பரவுவதைத் தடுக்கப் போராடுகின்றனர் எனவும், நேற்று மாலை தீயுடன் பேராடத் தொடங்கிய 130 தீயணைப்புப் படை வீரர்கள், இன்று காலை வரை அங்கு தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், மாநகரசபை முதல்வர் தெரிவித்துள்ளார்.