Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

மன்சூர் அலிகானுக்கு நடிகர் சங்கம் கண்டனம்..!

மன்சூர் அலிகானுக்கு நடிகர் சங்கம் கண்டனம்..!

19 கார்த்திகை 2023 ஞாயிறு 14:21| பார்வைகள் : 697


த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம் ஊடகங்கள் முன்பு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது

மூத்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகைகள் பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்;

சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது;ஒரு நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக பொறுப்புணர்ந்து பேச அவர் கற்றுக்கொள்ள வேண்டும்;

மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும் போது, தான் உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும்;

எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ, அதே ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்"