Paristamil Navigation Paristamil user login Paristamil advert login

மாலத்தீவில் ஆச்சரியமூட்டும் மிதக்கும்...

மாலத்தீவில் ஆச்சரியமூட்டும் மிதக்கும்...

29 புரட்டாசி 2023 வெள்ளி 07:43| பார்வைகள் : 1400


இலங்கைக்கு தென்மேற்கே 1,000 கிலோமீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுகள் கூட்டம் அமைந்துள்ளது 

மாலத்தீவு கூட்டத்தின் 80 சதவீத நிலப்பரப்பு தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளன,

2100ம் ஆண்டுக்குள் மாலத்தீவு நீரில் மூழ்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1200 பவளத் தீவுகள் கொண்ட உலகின் மிகத் தாழ்ந்த பகுதியாகவும் மாலத்தீவுகள் கூட்டம் கருதப்படுகிறது.

மாலத்தீவில் புதிய மிதக்கும் நகரம் ஒன்றை உருவாக்க அந்த நாட்டு அரசாங்கம் முன்வந்துள்ளது.

இந்த புதிய மிதக்கும் நகரத்தின் திட்டத்தின் மூலம் தலைநகர் மாலேயிலிருந்து பத்து நிமிட கடல் பயணத்தில் சுமார் 20,000 மிதக்கும் குடியிருப்புகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை மாலத்தீவு அரசும், டச்சு ரியல் எஸ்டேட் டெவலப்பர் டாக்லாண்ட்ஸும் இணைந்து தொடங்கிய பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2024ம் ஆண்டில் இந்த பணி நிறைவடையும் எனவும், அதனை தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மிதக்கும் நகரத்தில் 100க்கும் மேற்பட்ட மிதக்கும் குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 7000 வீடுகள், உணவகங்கள், கடைகள், பள்ளிகள், ஹோட்டல்கள் இந்த புதிய மிதக்கும் நகரத்தில் முதலில் அமையவுள்ளது.

இந்த புதிய மிதக்கும் நகரத்தின் கட்டிடங்கள் தரையில் கட்டப்பட்டு, பின் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு கடல் நீரில் நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நிலத்தை போலவே இங்கும் சட்டபூர்வமான அதிகாரங்கள், பட்டாக்கள், வீட்டை வாங்கும், விற்கும் உரிமைகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மிதக்கும் நகரங்கள் அடியில் கடற்பாசிகள் மட்டும் பவளப்பாறைகள் நல்ல முறையில் வளரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு சூரிய ஒளி மற்றும் கடல் அலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் விநியோகம் செய்யப்படுவதுடன், போக்குவரத்திற்கு மின்சார ஸ்கூட்டர், சைக்கிள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.