Paristamil Navigation Paristamil user login Paristamil advert login
முன் வைத்த காலை பின்னாடி வைக்கலாமா....?

முன் வைத்த காலை பின்னாடி வைக்கலாமா....?

முன் வைத்த காலை பின்னாடி வைக்கலாமா....?

8 புரட்டாசி 2023 வெள்ளி 10:55| பார்வைகள் : 208


ஆசிரியர்: மாணவர்களே... எல்லாரும் முதல் நாள் கிளாசுக்கு வந்திருக்கீங்க! நான் சொல்றத நல்லா மனசுல பதிய வைக்கனும்... எக்காரணத்த கொண்டும் முன்வெச்ச கால பின்னாடி வைக்கவே கூடாது... சரியா..?

மாணவர்கள்: ஓகே சார்..

(தாமதமாக வந்த மாணவர் அனுமதியின்றி உள்ளே வருகிறார்..) 

ஆசிரியர்: டேய்... வெளியே போ! வரது லேட்டு... இதுல அனுமதி வாங்காம வரியா?

மாணவன்: சாரி சார்.. இனிமே சீக்கிரமா வந்துடுறேன், ஆனால் இப்போ வெளிய போக மாட்டேன். 

ஆசிரியர்: சொன்னா கேக்க மாட்டியா?

 மாணவன்: நீங்க சொன்னது கேட்டுதான் சார் முன் வெச்ச கால பின்னாடி வைக்க மாட்டேன்னு உறுதியா நிக்கிறேன்.

ஆசிரியர்: இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. உள்ள போ! (மனதிற்குள்: இனி இந்த அட்வைச யாருக்கும் சொல்லக்கூடாது) 

மற்றொரு மாணவன்: சார், முன்வெச்ச கால பின்னாடி வைக்க கூடாதுன்னு சொல்றீங்க.. கலர் கயிறு கட்டிட்டு வரக்கூடாதுன்னு ஆர்டர் போட்டு அடுத்த நாளே கட்டிட்டு வர தடை இல்லன்னு சொல்லிட்டீங்களே.. 

ஆசிரியர்: அது வந்து... (சொல்லி முடிப்பதற்குள் மற்றொரு மாணவன் எழுந்து...) 

மற்றொரு மாணவன்: ஆமா சார்... என் தம்பி கூட போன வருசம் எல்.கே.ஜி. கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சான். 

இந்த வருசம் கவர்மெண்ட் ஸ்கூல்ல யு.கே.ஜி. இல்லன்னு கேள்விப்பட்டு நிறைய காசு கொடுத்து பிரைவேட் ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க... கடைசில திரும்ப யுகேஜி இருக்குன்னு சொல்லிட்டாங்க... எங்களுக்கு தானே காசு வேஸ்டு 

ஆசிரியர்: தம்பி... அரசியல் பேசாத!

மற்றொரு மாணவன்: கலைஞரே எங்க வயசுல அரசியலுக்கு வந்துட்டாராம்... நாங்க பேசுனா தப்பா சார் 

ஆசிரியர்: விடுங்கடா... நான் சொன்னது தப்புதான்!
 

எழுத்துரு விளம்பரங்கள்