Paristamil Navigation Paristamil user login Paristamil advert login
ரஷ்யாவின் லுனா 25 விண்கலம்  நிலாவில் ஏற்பட்ட பள்ளம்! 

ரஷ்யாவின் லுனா 25 விண்கலம்  நிலாவில் ஏற்பட்ட பள்ளம்! 

ரஷ்யாவின் லுனா 25 விண்கலம்  நிலாவில் ஏற்பட்ட பள்ளம்! 

2 புரட்டாசி 2023 சனி 08:42| பார்வைகள் : 341


நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ, சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.

முன்னதாக இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யா, லுனா 25 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது.

 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா அனுப்பிய இந்த விண்கலம் தோல்வியை தழுவியது.

நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்ற போதும் கடைசி கட்டத்தில் தரையிறங்க முடியாமல் நிலவில் விழுந்தது.

ஒகஸ்ட் 19 ஆம் திகடி இந்த திட்டம் தோல்வியில் முடிந்து விட்டது என ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் 10 மீட்டர் விட்டத்திற்கு  புதிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளதை நாசாவின் எல்.ஆர்.ஓ ஆர்பிட்டர் கண்டறிந்துள்ளது.

இந்த பள்ளம் ரஷ்யாவின் லுனா 25 விண்கலத்தினால் ஏற்பட்ட பள்ளமாக இருக்க வாய்ப்புள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்