Paristamil Navigation Paristamil user login Paristamil advert login
'ஜவான்' ஆஸ்கார் விருதுக்கு செல்கிறதா....?

'ஜவான்' ஆஸ்கார் விருதுக்கு செல்கிறதா....?

 'ஜவான்' ஆஸ்கார் விருதுக்கு செல்கிறதா....?

19 புரட்டாசி 2023 செவ்வாய் 07:18| பார்வைகள் : 294


ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’ஜவான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது

இந்த படம் முதல் நாளே ரூ.129 கோடி வசூல் செய்த நிலையில் 11 நாட்களில் 858 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் 1000 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பு பெற்ற இந்த படம் ஆஸ்காருக்கு செல்ல இருப்பதாக அட்லி தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது ’திரைத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஆஸ்கார், தேசிய விருதுகள், கோல்டன் குளோப் விருதுகள் மீது ஆசை இருக்கும். அந்த வகையில் ‘ஜவான்’ திரைப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்ப நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

இந்த பேட்டியை ஷாருக்கான் அவர்கள் படித்தால் அவரிடம் கண்டிப்பாக ஆஸ்காருக்கு இந்த படத்தை எடுத்துச் செல்ல முயற்சி செய்யுங்கள் என்று கூறுவேன் என்று தெரிவித்தார். ’ஜவான்’ திரைப்படம் ஆஸ்கார் செல்லுமா? அப்படியே சென்றாலும் விருதை வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எழுத்துரு விளம்பரங்கள்